அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண பிரசன்னா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • December 16, 2021 / 07:47 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசன்னா. இவர் அறிமுகமான முதல் படமே முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமின் தயாரிப்பில் அமைந்தது. அந்த படம் தான் ‘ஃபைவ் ஸ்டார்’. இந்த படத்தை இயக்குநர் சுசி கணேசன் இயக்கியிருந்தார். அதன் பிறகு 2004-ஆம் ஆண்டு வெளியான ‘அழகிய தீயே’ என்ற படம் சூப்பர் ஹிட்டாகி, பிரசன்னாவின் நடிப்புக்கும் லைக்ஸ் போட வைத்தது.

‘அழகிய தீயே’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு பிரசன்னாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. 2012-ஆம் ஆண்டு பிரபல நடிகை சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரசன்னா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இப்போது பிரசன்னா நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ உருவாகி வருகிறது.

இந்நிலையில், பிரசன்னா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2014-யில் ரிலீஸான தமிழ் படம் ‘வீரம்’. அஜித் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோலில் விதார்த் நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் சிவாவின் முதல் சாய்ஸாக இருந்தது பிரசன்னா தானாம். பின், சில காரணங்களால் பிரசன்னாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus