தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த். பிரபல இயக்குநரும், நடிகருமான தியாகராஜனின் மகனான பிரஷாந்த், திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
பிரஷாந்த் அறிமுகமான முதல் படம் ‘வைகாசி பொறந்தாச்சு’. இந்த படத்துக்கு பிறகு பிரஷாந்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது பிரஷாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘அந்தகன்’.
இந்த படத்தை பிரஷாந்தின் தந்தை தியாகராஜனே இயக்கியுள்ளார். இப்படம் ஹிந்தியில் மெகா ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக்காம். மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரஷாந்த் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 1997-யில் ரிலீஸான தமிழ் படம் ‘நேருக்கு நேர்’.
‘தளபதி’ விஜய் – சூர்யா இணைந்து நடித்திருந்த இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வஸந்த் இயக்கியிருந்தார். இதில் சூர்யா நடித்திருந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் வஸந்த் பிரஷாந்தை அணுகினாராம். அப்போது, ‘ஜீன்ஸ்’-ல் நடித்து கொண்டிருந்த பிரஷாந்த் அப்படம் முடியும் வரை வேறு எந்த ஒரு படத்திலும் கமிட்டாக கூடாது என இயக்குநர் ஷங்கர் சொல்லியிருப்பதாக கூறி விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டாராம்.