இயக்குநர் பிரஷாந்த் நீலின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘கே.ஜி.எஃப் 2’ மேக்கிங் வீடியோ!

  • June 4, 2021 / 03:35 PM IST

‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடித்துள்ளாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளார்களாம். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு (2020) டிசம்பர் 20-ஆம் தேதி தான் படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி ஹீரோ யாஷின் பர்த்டே ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (ஜூன் 4-ஆம் தேதி) இயக்குநர் பிரஷாந்த் நீலின் பர்த்டே ஸ்பெஷலாக ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus