‘கே.ஜி.எஃப்’ படத்தின் பார்ட் 2-வை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கதையின் நாயகனாக யாஷ் நடிக்கிறாராம். மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடிக்கிறார். இதன் முதல் பாகம் சூப்பர் ஹிட்டானதால், ரசிகர்களுக்கு பார்ட் 2 மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தின் ஷூட்டிங் முழுவதும் இம்மாத இறுதியில் முடிவடைந்து விடுமாம்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 7-ஆம் தேதி) இந்த படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹீரோ ராக்கி பாயும், வில்லன் அதீராவும் மோதும் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை இன்று ஷூட் செய்கிறோம்” என்று கூறியுள்ளார். படத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
Climax it is !!!!
RockyAdheera
With the deadly fight masters anbariv…..#KGFCHAPTER2 pic.twitter.com/QiltJiGQgl— Prashanth Neel (@prashanth_neel) December 7, 2020