தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘தேவரா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கொரட்டாலா சிவா இயக்குகிறார்.
இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 5-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தை ‘கே.ஜி.எஃப் 1 & 2’ புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளாராம். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தை ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
The most awaited project of @tarak9999 & #PrashanthNeel will commence in April, 2024 ❤️
The prestigious high-octane spectacle will create a new benchmark in Indian Cinema #NTRNeel @NANDAMURIKALYAN @NTRArtsOfficial pic.twitter.com/CxTPchxOPz
— Mythri Movie Makers (@MythriOfficial) October 5, 2023