திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இலியானா… காதலருடன் இருக்கும் புகைப்படம் வைரல்!
June 13, 2023 / 01:07 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் இலியானா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கேடி’. இந்த படத்துக்கு பிறகு இலியானா நடித்த இரண்டாவது தமிழ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அது தான் ‘நண்பன்’. இந்த படத்தில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடிக்க, இதனை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்போது இலியானா கைவசம் ஒரு ஹிந்தி படம் மட்டும் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த மாதம் இலியானா இன்ஸ்டாகிராமில் இரண்டு புகைப்படங்களை ஷேரிட்டு தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று அறிவித்தார். இதற்கு சிலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர், பலர் “எப்போது உங்களுக்கு திருமணம் ஆனது? குழந்தைக்கு அப்பா யார்?” என்று கேட்டனர்.
தற்போது, இலியானா தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஆனால், இப்புகைப்படத்தில் காதலரின் முகம் தெளிவாக தெரியவில்லை. மேலும், இவரின் பெயரையும் இலியானா குறிப்பிடவில்லை.