துணிவு படமும் வாரிசு மாதிரி தான் போல ….!

  • December 29, 2022 / 01:41 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .

2023 -ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறார் . வரும் டிசம்பர் 31 -ஆம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்நிலையில் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரேம் குமார் துணிவு படம் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus