பிங்க் கலர் காஸ்டியூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!
October 20, 2023 / 10:36 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இவருக்கு அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. இந்த படத்தில் ‘மேரி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தார். அதன் பிறகு அனுபமா பரமேஸ்வரனுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘கொடி, தள்ளிப் போகாதே’, தெலுங்கில் ‘அ ஆ, ப்ரேமம், சதமானம் பவதி, கிருஷ்ணார்ஜுனா யுத்தம், தேஜ் ஐ லவ் யூ, ஹலோ குரு ப்ரேம கோஷமே, ராக்ஷஷுடு’, மலையாளத்தில் ‘ஜோமெண்டே சுவிசேஷங்கள், மணியாரயிலே அசோகன்’, கன்னடத்தில் ‘நடசார்வாப்ஹவுமா’ என படங்கள் குவிந்தது.
இப்போது நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.