தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘நிழல்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நடிகை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா தனது கால்ஷீட் டைரியில் இணைய மற்றுமொரு மலையாள படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு ‘பாட்டு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். இதில் ஹீரோவாக டாப் மலையாள நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் நடிக்க உள்ளாராம்.
இந்த படத்தை ‘நேரம், ப்ரேமம்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்க உள்ளாராம். இத்தகவலை அல்போன்ஸ் புத்திரனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இந்த படத்துக்கு அல்போன்ஸ் புத்திரனே இசையமைத்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.