தமிழ் திரையுலகில் நடிகர்களாக இருந்து இசையமைப்பாளர் ஆனவர்கள் வரிசையில் பிரேம்ஜி அமரனும் ஒருவர். 2006 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான “வல்லவன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார் பிரேம்ஜி அமரன்.
ஏற்கனவே இயக்குனராக அறிமுகமாக வேண்டிய பிரேம்ஜி, சிலநாட்கள் யுவன் சங்கர் ராஜாவுடன் துணை இசையமைப்பாளராகவும் இருந்தாராம். இதை தொடர்ந்து தன் சகோதரர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “சென்னை-28” படத்தின் மூலம் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றார்.
அதிகமாக தன் சகோதரர் படத்தில் காமெடி வேடங்களில் நடித்து வரும் பிரேம்ஜி அமரன் தற்போது தனது கம்போஸிங்கில் வெளியான முதல் பாடலான “அது ஒரு காலம் பாடல்” தற்போது 10 மில்லியன் வியூஸ்களை பெற்றதை மகிழ்ச்சியாக தெரிவித்து அவரது ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
https://twitter.com/Premgiamaren/status/1296282246316355585?s=19
“அதே நேரம் அதே இடம்” என்ற இந்தப் பாடல் இடம் பெற்ற படத்தில்தான் அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “பார்ட்டி” என்ற திரைப்படத்திற்கும் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “கசடதபற” என்ற படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.