பிரேம்ஜி அமரன் வெளியிட்டுள்ள வெங்கட்பிரபுவின் சக்சஸ் வீடியோ!

  • August 8, 2020 / 03:00 PM IST

நடிகராக தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்த வெங்கட்பிரபு, 14 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 7ம் தேதி இயக்குனராக தன் முதல் நாள் “சென்னை 600028” படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக அவரது தம்பி மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, இயக்குனராக வெங்கட்பிரபுவின் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு வெளியான “சென்னை 600028” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனரான வெங்கட் பிரபு தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி மற்றும் சென்னை 600028 பகுதி 2 ஆகிய படங்களை இயக்கினார்.

கலகலப்பான கதைக்களம் மற்றும் விறுவிறுப்பாக நகரும் காட்சிகள் என இவரது இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

“சென்னை 600028” படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி, நித்தின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், விஜய் வசந்த், விஜயலட்சுமி, அஜய் ராஜ், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக் அருண் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு பின்னணி இசையையும் பாடல்களையும் இசையமைத்திருந்தார்கள். கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 14 வருடங்களுக்கு முன் இன்று தொடங்கப்பட்டதை கொண்டாடும் விதமாக பிரேம்ஜி வெளியிட்ட இந்த பதிவுக்கு வெங்கட்பிரபுவும் நன்றி கூறி ரிப்ளை செய்துள்ளார். இவர் வெளியிட்ட இந்த வீடியோவில் சென்னை 600028 படத்தில் தொடங்கி கடைசியாக இயக்கிய படம் வரை இருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

வெங்கட்பிரபு குறிப்பிட்டுள்ளதாவது “இதை எடிட் செய்த ராம்ஜிக்கு எனது மனமார்ந்த நன்றி. 14 வருடங்களுக்கு முன் என் திரையுலக பயணத்தை இயக்குனராக இன்று தொடங்கினேன். கடவுளுக்கு நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது மிகப்பெரிய நன்றி” என்று உணர்ச்சிவசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/Premgiamaren/status/1291610337125359618?s=19

தற்போது வெங்கட் பிரபு சிம்பு நடிப்பில் “மாநாடு” எனும் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus