2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான “சென்னை 28” படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன், ஜெய், சிவா, அரவிந்த் ஆகாஷ், நித்தின் சத்யா அஜய் ராஜ், ரஞ்சித், விஜய் வசந்த், பிரசன்னா, இனிகோ பிரபாகரன், கார்த்திக், அருண் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
மேலும் நடிகை விஜயலட்சுமி இந்த படத்தில் தான் அறிமுகமானார். இந்தப்படத்தை எஸ்பிபி சரண் தயாரித்திருந்தார். இளைஞர்களை ஈர்க்கும் விதமாக அமைக்கப்பட்ட இந்த காமெடி கதை களத்தில் இரண்டு கிரிக்கெட் டீம்களுக்கு இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை படம்பிடித்துக் காட்டியிருந்தார்கள்.
இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன், யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா பின்னணி இசையையும் பாடல்களையும் இசையமைத்திருந்தார்கள்.
சக்தி சரவணன் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகள் மனதிற்கு நிறைவு தரும் விதமாக அமைந்திருந்தது. தற்போது பிரேம்ஜி அமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “ஷார்க்ஸ் டீம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தெருவில் இளைஞர்கள் விளையாட்டும் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நகைச்சுவை காட்சிகள் முழுமையாக நிறைந்திருக்கும். இந்த படத்தின் இரண்டாம் பாகம் கூட சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.
https://www.instagram.com/p/CCtD1EfAFl9/?igshid=1eskl2t3m4r47
இந்தப்படம் கன்னடம், பெங்காலி, சிங்கள மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டது.
இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி இந்த படத்தில் வரும் ஷார்க்ஸ் டீமில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் டீமின் புகைப்படத்தை தான் தற்போது வெளியிட்டுள்ளார். சிறந்த குடும்ப படத்திற்கான தமிழ்நாடு மாநில விருதை இந்த படம் பெற்றது குறிப்பிடத்தக்கது.