டான் படத்தின் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடியா ?

  • September 30, 2022 / 01:03 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான படம் டான் .இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் . S.J.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் . நடிகர் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் .பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருந்தது .

இந்நிலையில் படம் திரை அரங்கில் மே 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான முதல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி உள்ளனர் . பொதுவான ரசிகர்களும் , சினிமா ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி இருந்தனர் .சிவகார்த்திகேயன் அவர்களின் திரைப்பயணத்தில் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது .

டான் படம் 100 கோடி வசூல் செய்து பெரிய அளவில் சாதனை புரிந்து உள்ளது .இயக்குனர் சிபி சக்கரவர்த்தி நடிகர் ரஜினி அவர்களை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது .இந்நிலையில் டான் திரைப்படத்தின் ஆடியோ உரிமையை 3 கோடி ரூபாய்க்கு சோனி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus