‘பகாசூரன்’ இயக்குநர் மோகன்.ஜி-க்கு தயாரிப்பாளர் கிஃப்ட்டாக கொடுத்த வாட்சின் விலை என்ன தெரியுமா?

  • February 26, 2023 / 10:41 AM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘பகாசூரன்’ கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ளார். இதில் செல்வராகவனுடன் இணைந்து ‘சதுரங்க வேட்டை’ நட்டியும் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ராதாரவி, கே.ராஜன், சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் கெளதம் இயக்குநர் மோகன்.ஜி-க்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள வாட்சை பரிசாக வழங்கினார் என்றும், படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus