முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘கல்கி 2898 AD’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சலார்’ படத்தை ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கி வருகிறார்.
இப்படம் இரண்டு பாகங்களாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது. ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோ பிரபாஸுக்கு ஜோடியாக பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
பிரபாஸுக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் ப்ரித்விராஜ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்படத்தின் முதல் பாகத்தை வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, நடிகர் ப்ரித்விராஜ் இந்த படத்துக்கான தனது டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
#Salaar Final dubbing corrections done. I have had the privilege of lending my own voice for all my characters across various languages I’ve worked in over the years. I have even dubbed for some of my characters in multiple languages. But to be dubbing for the same character, in… pic.twitter.com/RmMZZ9EF72
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) December 10, 2023