மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ப்ரித்விராஜ் சுகுமாரன். இவர் தமிழில் ‘கனா கண்டேன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்துலேயே வில்லன் ரோலில் மிரட்டியிருந்தார். அதன் பிறகு ப்ரித்விராஜுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித் திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத் தலைவன்’ என படங்கள் குவிந்தது.
ப்ரித்விராஜ் மலையாளம் மற்றும் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நேற்று ‘விளையாத் புத்தா’ என்ற மலையாள படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டைக் காட்சியை படமாக்கும்போது நடிகர் ப்ரித்விராஜுக்கு காலில் படுகாயம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறதாம்.