மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ப்ரித்விராஜ் சுகுமாரன். இவர் தமிழில் ‘கனா கண்டேன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்துலேயே வில்லன் ரோலில் மிரட்டியிருந்தார். அதன் பிறகு ப்ரித்விராஜுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித் திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத் தலைவன்’ என படங்கள் குவிந்தது. ப்ரித்விராஜ் மலையாளம் மற்றும் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். தற்போது, நடிகர் ப்ரித்விராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார்.
அந்த பதிவில் “சமீபத்தில் ‘ஜன கண மன’ என்ற மலையாள படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டேன். அதற்கு முன்பு ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என்று தான் வந்தது. இப்பொது கடைசி நாள் ஷூட்டிங்கின் போது டெஸ்ட் எடுத்து பார்த்ததில் எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) October 20, 2020