மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ப்ரித்விராஜ் சுகுமாரன். இவர் தமிழில் ‘கனா கண்டேன்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்துலேயே வில்லன் ரோலில் மிரட்டியிருந்தார். அதன் பிறகு ப்ரித்விராஜுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் ‘பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித் திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவியத் தலைவன்’ என படங்கள் குவிந்தது. ப்ரித்விராஜ் மலையாளம் மற்றும் தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். தற்போது, ப்ரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரெடியாகவிருக்கும் இந்த படத்தை இயக்குநர் கோகுல்ராஜ் பாஸ்கர் இயக்கவுள்ளார். இதனை ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ப்ரித்விராஜே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ப்ரித்விராஜ் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். இப்படம் விர்ச்சுவல் புரொடக்ஷன் முறையில் படமாக்கப்படவுள்ளதாம். இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
This is an exciting new chapter in the art and science of film making! So looking forward to this one! Changing times, newer challenges, innovative methods! And an epic story to tell!
Stay tuned for updates! @PrithviOfficial @PrithvirajProd @frames_magic #GokulrajBaskar pic.twitter.com/kzTc7LNvIN— Prithviraj Sukumaran (@PrithviOfficial) August 17, 2020