‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகையா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என எட்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் என மூன்று ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மற்றும் பாப்புலர் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் மித்ரன்.ஆர்.ஜவஹரின் முதல் சாய்ஸாக இருந்தது சமந்தா என தகவல் கிடைத்துள்ளது. பின், சில காரணங்களால் சமந்தாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Share.