மான்ஸ்டர், மாபியா படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட நாள் பாய் பிரண்டும் காதலனுமான ராஜவேல் புகைப்படத்தை வெளியிட்டார்.
அப்போது 10 வருடத்துக்கு முன் நான் அழகில்லாதவள் என்று மற்றவர்களால் பழிக்கப்பட்டபோது என்னிடம் அன்புகாட்டிப் பழகிய நீ இப்போதும் அதேபாசத்துடன் என்னுடன் அன்புகாட்டுகிறாய் என்று தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் பிரியா பவானி தான் தனிமையாக மொட்டை மாடியில் நிற்கும் படத்தை வெளியிட்டு விரக்தியான ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் சித்ரா பௌர்ணமி இரவு!போன வருஷம் இதே நாள், கிரிவலம் போன, மூனு மாசத்துல வேண்டிக்கிட்டத கடவுள் கண்டிப்பா குடுப்பார்னு பிரண்டுசொன்னத நம்பி மனசு நிறைய ஒரே வேண்டுதல சுமந்துகிட்டு இரவோட இரவா பௌர்ணமிய தொரத்திக்கிட்டு திருவண்ணாமலை போனேன்.
கடவுள் கேட்டத குடுக்கலனாலும் பரவாயில்லை கிழித்து என் முகத்துலயே எறிந்து கை தட்டி சிரித்தார். ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியல. மனிதர்களையும் அவர் குணங்களையும் நாம் பிடிவாதமாகப் பார்க்க மறுத்த கோணத்தில் காலம் காட்டியது ரெண்டு சித்ரா பௌர்ணமிக்கு இடையே வாழ்க்கை மட்டுமில்லை உலகமே மாறிடுச்சு