“முட்டாள்தனமான வாதம்” என்று சொன்ன ரசிகர்… பதிலடி கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்!

  • May 4, 2021 / 05:58 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நடிகை என வலம் வந்தவரை ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. அது தான் ‘மேயாத மான்’. ‘மேயாத மான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யின் ‘மாஃபியா : அத்தியாயம் ஒன்று’, அருள்நிதியின் ‘களத்தில் சந்திப்போம்’ என நான்கு படங்களிலும், பரத்தின் ‘டைம் என்ன பாஸ்’ வெப் சீரிஸிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இப்போது நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, ஹரிஷ் கல்யாணின் ‘ஓ மணப்பெண்ணே’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’, சிலம்பரசனின் ‘பத்து தல’, இயக்குநர் சிம்பு தேவனின் ‘கசட தபற’, துல்கர் சல்மானின் ‘வான்’, கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’, அசோக் செல்வனின் ‘ஹாஸ்டல்’, அருண் விஜய் – இயக்குநர் ஹரி காம்போவில் உருவாகும் படம் என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம். வாழ்த்துகள்” என்று கூறியிருந்தார்.

அதற்கு ஒரு ரசிகர் “அடடே மேடம் நீங்களே திருட்டு திராவிட சொம்பு தான?” என்று குறிப்பிட்டு ஒரு ஸ்டில்லை வெளியிட்டிருந்தார். இதற்கு ப்ரியா பவானி ஷங்கர் “This cracked me up பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான். இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” என்று பதில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர் “சகோதரி முதல்வரை நேரடியா மக்கள் தேர்ந்தெடுக்கவே முடியாது… அப்படியே உங்கள் முட்டாள்தனமான வாதப்படி கூட 2016 க்கு பிறகு 2021 ல தான தேர்தல் வரும் அது என்ன நீண்ட காலம்.. 2016 ல ஜெயலலிதா தான் முதல்வர் வேட்பாளர். அப்புறம் முதல்வர் இறந்தால் ஆட்சி கவிழ்க்கனும்னு சட்டமும் கிடையாது” என்று கூறியிருந்தார்.

இதற்கு ப்ரியா பவானி ஷங்கர் “take a seat என்றால் seat-அ தூக்கிக்கிட்டு நில்லுன்னு அர்த்தம் இல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்னா மக்கள் உக்காந்து inky pinky போட்டு எடுத்தாங்கன்னு அர்த்தம் கிடையாது. 6th std civics book விட நிறைய படிச்சிருக்கேன் sir. மத்தப்படி எது முட்டாள்தனமான வாதம்னு நான் சொல்ல எதுவும் இல்லை” என்று பதில் கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus