இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ப்ரியா பவானி ஷங்கர்!

  • March 14, 2022 / 01:36 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ப்ரியா பவானி ஷங்கர். செய்தி வாசிப்பாளர், ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் நடிகை என வலம் வந்தவரை ஹீரோயினாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. அது தான் ‘மேயாத மான்’. ‘மேயாத மான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’, அருண் விஜய்யின் ‘மாஃபியா : அத்தியாயம் ஒன்று’, அருள்நிதியின் ‘களத்தில் சந்திப்போம்’, இயக்குநர் சிம்புதேவனின் ‘கசட தபற’ என ஐந்து படங்களிலும், பரத்தின் ‘டைம் என்ன பாஸ்’ வெப் சீரிஸிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இப்போது நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, எஸ்.ஜே.சூர்யாவின் ‘பொம்மை’, சிலம்பரசனின் ‘பத்து தல’, கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’, ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’, அசோக் செல்வனின் ‘ஹாஸ்டல்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’, அருண் விஜய்யின் ‘யானை’, ஜெயம் ரவியின் ‘அகிலன்’ என 9 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus