தனது திருமணம் பற்றி பேசிய பிரியா பவானி ஷங்கர்.

ரத்ன குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் மேயாத மான் . இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் ,மாஃபியா , ஹாஸ்டல் என பலப்படங்களில் நாயகியாக நடித்து இருக்கிறார். இவர் சின்னத்திரையில் நடிக்கும் காலத்திலே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது‌.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகை பிரியா பவானி ஷங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் .தனது காதலரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிப்பார்.

இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் தனது திருமணம் தள்ளிப்போனது குறித்து பேசி‌ உள்ளார். அதில் கல்லூரி முடிந்து சில காலத்திலேயே திருமணம் செய்துக்கொண்டு செட் ஆகிவிடலாம் என்று இருந்தேன் ஆனால் எதிர்பாராத விதமாய் படங்களில் நடிக்க ஆரம்பித்த காரணத்தால் திருமணம் தள்ளிப்போகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.

Share.