ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் மேயாத மான் . இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் ,மாஃபியா , ஹாஸ்டல் என பல படங்களில் நாயகியாக நடித்து இருக்கிறார். இவர் சின்னத்திரையில் நடிக்கும் காலத்திலே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான ஹாஸ்டல் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆரம்பத்தில் நல்ல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பெரிய அளவில் சிறந்த கதையை தேர்ந்த நடிப்பதில் சற்று தடுமாறி வருவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் இவர் நடிப்பில் யானை படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .யானை படத்தில் தனக்கான கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்றும் ஹரி அவர்களின் படத்தில் கண்டிப்பாக கதாநாயகிகளுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று யானை படத்தில் நடித்தேன் என்று தெரிவித்து இருந்தார் .
தற்போது இவர் நடிப்பில் அகிலன் மற்றும் பொம்மை ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராக இருக்கிறது . இந்நிலையில் ப்ரியா பவானி சங்கர் சென்னையில் புதிய வீடு வாங்கி உள்ளார் . இதுகுறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”18 வயதில் கடற்கரைக்கு சென்று இங்கே ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு மாலைபொழுதை கழித்தோம். அதன்படி இப்போது புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனது நெற்றியில் காதலர் முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.