‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் படங்களை நேரடியாக OTT-யில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில், ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’, யோகி பாபு நடித்துள்ள ‘காக்டெய்ல்’, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள ‘டேனி’, வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ ஆகிய தமிழ் படங்கள் OTT-யில் வெளி வந்தது.
தற்போது, பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘கவிதாலயா’ OTT-க்காக ஒரு வெப் சீரிஸை தயாரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘டைம் என்ன பாஸ்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸை ‘சுட்ட கதை’ படத்தின் இயக்குநர் சுபு இயக்கி உள்ளாராம்
டைம் டிராவல் கதைக்களம் கொண்ட இவ்வெப் சீரிஸில் பரத், ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும், முக்கிய ரோல்களில் கருணாகரன், ரோபோ ஷங்கர், அலெக்சாண்டர் பாபு, சஞ்சனா சாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் வருகிற செப்டம்பர் 18-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகுமாம். இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
What if you get trapped with roommates who are time travellers? ⌛
New series, September 18!#TimeEnnaBossOnPrime @bharathhere @ILikeSlander @SarathySanjana @priya_Bshankar @KavithalayaaOff #Karunakaran #RoboShankar pic.twitter.com/IcA822FiU7
— prime video IN (@PrimeVideoIN) September 14, 2020
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.