நடிகர் ஷாருக்கான் தற்போது நடித்துள்ள படம் “பதான்”. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கி உள்ளார் . ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
இந்நிலையில் “பதான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது . மேலும் இப்படத்திலிருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது .
பதான் படம் 25-ந்தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியாக உள்ளது . இந்நிலையில் ‘பதான்’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநிலத்தில் ஷாருக்கானின் ‘கட் அவுட்’ அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் அருகே உள்ள கர்ணாவதியில் இருக்கும் வணிக வளாகத்தில் ஷாருக்கான் கட் அவுட்டை பதான் படத்தின் விளம்பரத்துக்காக வைக்கப்பட்டு இருந்தது. அந்த கட் அவுட்டை பஜ்ரங்தள் தொண்டர்கள் அடித்து உடைத்து, சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.