சூர்யா நடிப்பில் 2006ஆம் வருடம் வெளியான “சில்லுனு ஒரு காதல்” படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கேஇ ஞானவேல்ராஜா. இவர் அதிகமாக சூர்யா மற்றும் கார்த்தி படங்களை தயாரித்துள்ளார்.
அது மட்டுமின்றி பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் “அருவா” திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் கடந்த மார்ச் மாதம் வெளியானது.
கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தனக்கு சம்பந்தமில்லாத பணம் கையாடல் வழக்கில் தன்னுடைய பெயர் இருந்ததால் அதை நீக்குவதற்காக மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பயணம் செய்து வந்தார் ஞானவேல்ராஜா.
இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா பாசிட்டிவாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நிக்கி கல்ராணி, எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று ஞானவேல்ராஜா என தொடர்ந்து சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் சினிமா படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கருதப்படுகிறது.