லோகேஷ் – சூர்யா கூட்டணியில் புதிய படம் !

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன் . இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவுடன் இணைந்து தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறது . தெலுங்கு நடிகை கீர்த்தி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

பாலாவின் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தை கலைப்புலி.S.தாணு தயாரிக்கிறார் . இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது . இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது .

இயக்குனர் லோகேஷ் மாநகரம் படம் முடிந்தவுடன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து இரும்பு கை மாயாவி என்கிற படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் அந்த படம் அப்பொழுது தொடங்காமல் போனது . அந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருந்தார் . இந்நிலையில் இரும்பு கை மாயாவி படம் ஒரு இன்டெர்நேஷனல் படம் என்றும் இயக்குனர் ரவிக்குமார் சூர்யாவை வைத்து இயக்க உள்ள படமும் இன்டெர்நேஷ்னல் படம் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார் . இரண்டு படமும் நிச்சயம் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

Share.