வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’-யில் சூர்யா… படத்தின் பட்ஜெட்டை கேட்டு ஷாக்கான தயாரிப்பாளர்!

  • May 1, 2021 / 04:57 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த புதிய படமான ‘சூரரைப் போற்று’ சமீபத்தில் OTT-யில் ரிலீஸானது. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த ஆண்டு (2020) ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் அப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இதற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார். சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ என்ற நாவலை மையமாக வைத்து இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று விட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி இப்படத்துக்கான பாடல்கள் கம்போஸிங் பணியை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆரம்பித்தார். தற்போது, இந்த படத்தின் பட்ஜெட் ரூ.98 கோடி என தகவல் கிடைத்துள்ளது. இதில் சூர்யாவின் சம்பளம் – ரூ.28 கோடி, வெற்றிமாறனின் சம்பளம் – ரூ.20 கோடி என்று சொல்லப்படுகிறது. 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். ஆனால், படத்தின் பட்ஜெட் இவ்ளோவா? என்று கேட்டு ஷாக் மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளாராம் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus