சிவகார்த்திகேயன் – நெல்சன் காம்போவில் உருவாகியுள்ள ‘டாக்டர்’… ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்வீட்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ மற்றும் ‘டான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள ‘டாக்டர்’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்பவர் நடித்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சர்டிஃபிகேட் அளித்துள்ளதாகவும், படத்தின் நீளம் 2 மணி நேரம் 28 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

Sivakarthikeyan's Doctor Movie Release Plan1

Sivakarthikeyan’s Doctor Movie Release Plan1

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் “இன்னும் சில தினங்களில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளனர். ஏற்கனவே, மார்ச் 26 மற்றும் ரம்ஜான் என இரண்டு முறை இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

Share.