அந்த ஹீரோவா?… பெயரை கேட்டாலே தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!

சினிமாவில் பல படங்களில் கிடைத்த சின்ன ரோல்களில் நடித்து வந்த அந்த நடிகருக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது அந்த குழந்தைகள் படம்தான். அந்த பிறகு ஹீரோவாக அவதாரம் எடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

அதில் ஒரு ஐந்து படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு திருமணமும் செய்து கொண்டார். பின், தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. ஒரு கட்டத்தில் அவரை வைத்து யாரும் படம் எடுக்க முன் வராததால், அவரே தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார்.

மன்னர் படமான அதுவும் அந்த நடிகருக்கு வெற்றிப் படமாக அமையவில்லை. அப்படத்தை தயாரிக்கும் போது ஒருவரிடம் பணம் வாங்கி, சமீபத்தில் அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆகையால், அந்த நடிகரை வைத்து படம் எடுக்கவே பல தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்களாம். அவரின் பெயரை கேட்டாலே தெறித்து ஓடுகிறார்களாம்.

Share.