விக்ரம் நடிக்கும் பொன்னியின் செல்வன் பட்ஜெட் குறைப்பு?

  • May 8, 2020 / 07:05 PM IST

லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதேபோல் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. படபிடிப்பு உட்பட எந்த பணியையும் செய்ய முடியாத நிலை இருப்பதால் சினிமா துறையும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ள படங்களின் படபிடிப்பும் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே தொடங்கியது. படத்தின் முதற்கட்ட படபிடிப்பு தாய்லாந்தில் நடந்த நிலையில் இந்தியாவின் பல இடங்களிலும்படபிடிப்பு நடைபெற்றது.

லைகா நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைத்து இந்த படத்தை தயாரித்து வருகிறது. சுமார் 500 கோடி ருபாய் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலவும் பொருளாதார நிலையை காரணம் காட்டி அதை குறைக்க லைகா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகிறது என மணிரத்னம் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த வருட இறுதியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரையரங்குக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாகபடபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் அடுத்த வருடத்திற்க்கு தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus