விரைவில் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியாக போகும் பாடல் !

  • June 24, 2022 / 07:49 PM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகி வருகிறது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்நிலையில் மற்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து வருகிறார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .
பாகுபலி , கே.ஜி.எஃப், போன்ற மற்ற மொழி படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது .


இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்தின் டீசர் ஜூலை மாதம் 7-ஆம் தேதி வெளியாக இருக்கிறது . தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலில் இந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடக்க இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த அனைத்து முன்னணி நடிகர்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள் மேலும் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வர இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது . ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சி ஜூலை 07-ஆம் தேதியில் இருந்து ஜூலை இறுதிக்கு தள்ளி போய் இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசருக்கு முன்னாள் படத்தின் முதல் பாடலை வெளியிடலாம் என்ற முடிவை தற்பொழுது படக்குழு எடுத்து உள்ளது .எனவே ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus