இதுவரை யாரும் பார்த்திராத ‘புஷ்பா’ ஹீரோ அல்லு அர்ஜுனின் அரிய புகைப்படத் தொகுப்பு!

  • April 8, 2023 / 07:43 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த அல்லு அர்ஜுன் ஹீரோவாக அவதாரம் எடுத்த முதல் படம் ‘கங்கோத்ரி’.

இந்த படத்துக்கு பிறகு ‘ஆர்யா, பண்ணி’ ஆகிய 2 படங்களில் நடித்தார். இவ்விரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானதும், அல்லு அர்ஜுனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு படங்கள் குவிந்தது.

‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வந்த படம் ‘புஷ்பா’. இதன் முதல் பாகம் 2021-ஆம் ஆண்டு தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.

சமீபத்தில், ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி) நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் அல்லு அர்ஜுனின் அரிய புகைப்படத் தொகுப்பு இதோ…

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus