• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆர்.கே. சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’

ஆர்.கே. சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’

  • May 24, 2022 / 01:35 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆர்.கே. சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒயிட் ரோஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை ‘கயல்’ ஆனந்தி முக்கியமான வேடத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ். ஆர். ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சியை பிரபு அமைக்கிறார். சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கே .சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,“ அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக ‘ஒயிட் ரோஸ்’ உருவாகியிருக்கிறது.” என்றார்.

‘விசித்திரன்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் ஆர். கே. சுரேஷ் நடிப்பில் தயாராகும் சைக்கோ த்ரில்லர் படம் என்பதால், ‘ஒயிட் ரோஸ்’ படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #R.K. Suresh
  • #R.K. Suresh's new film 'White Rose'
  • #White Rose

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சிறுத்தை சிவா – சூர்யா படத்தில் இணைந்த பிரபலம் !

சிறுத்தை சிவா – சூர்யா படத்தில் இணைந்த பிரபலம் !

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

6 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

6 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

6 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

6 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

6 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version