சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.
விஜய் சேதுபதி நடிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள புதிய படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. இப்படம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அஸ்வினி கல்சேகர், ராதிகா சரத்குமார், சண்முகராஜன், ராஜேஷ், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு ப்ரீத்தம் இசையமைத்துள்ளார், மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பூஜா லதா சூர்தி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘டிப்ஸ் பிலிம்ஸ் & மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக நடிகை ராதிகா சரத்குமார் ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.