சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராய் லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படத்தில் விக்ராந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். அது தான் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கற்க கசடற’ திரைப்படம். அதன் பிறகு நடிகை ராய் லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சைத் தொடு, ரகசிய சிநேகிதனே, தாம் தூம், முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், வனயுத்தம், ஒன்பதுல குரு, இரும்பு குதிரை, அரண்மனை, பெங்களூர் நாட்கள், சவுகார்பேட்டை, நீயா 2’ என தமிழ் படங்கள் குவிந்தது.
நடிகை ராய் லக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் 21’, கன்னடத்தில் ‘ஜான்சி IPS’, தெலுங்கில் ‘ஆனந்த பைரவி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ராய் லக்ஷ்மி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். பிகினி உடை அணிந்து ராய் லக்ஷ்மி போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்லை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.
SUMMER TIME!!!
That little sun of a beach♥️ #myspace #myfavthingtodo #sealife #morningsunshine #beachgirl
#sunkissed
pic.twitter.com/R9AHtBnSuZ
— RAAI LAXMI (@iamlakshmirai) March 31, 2021