OTT-யில் ரிலீஸாகியிருக்கும் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • September 24, 2021 / 01:50 PM IST

‘ஜோக்கர்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ரம்யா பாண்டியன். அதன் பிறகு ‘ஆண் தேவதை’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். நடிகை ரம்யா பாண்டியன் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

கடந்த ஆண்டு (2020) நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தற்போது, ரம்யா பாண்டியன் நடித்துள்ள புதிய படமான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ இன்று (செப்டம்பர் 24-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகியுள்ளது.

டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். இதில் ரம்யா பாண்டியனுடன் இணைந்து வாணி போஜனும், மிதுன் மாணிக்கமும் நடித்துள்ளனர். இப்போது, இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus