‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல்… சூப்பராக நடனமாடி அசத்திய ராஷி கண்ணா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. ராஷி கண்ணா தனது கேரியரை முதன் முதலில் ஆரம்பித்தது ஹிந்தி திரையுலகில் தான். ஹிந்தியில் முதல் படமாக அமைந்தது ‘மெட்ராஸ் கஃபே’. அதன் பிறகு தெலுங்கில் ‘மனம்’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார் ராஷி கண்ணா.

‘மனம்’ படத்துக்கு பிறகு ‘ஜோரு, ஜில், ஷிவம், பெங்கால் டைகர், ஹைப்பர், ஆக்ஸிஜன், டச் சேசி சூடு’ என அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் ஹீரோயினாக கலக்கினார். தமிழில் ராஷி கண்ணாவுக்கு முதல் படமே அதர்வாவுக்கு ஜோடியாக அமைந்தது. அது தான் ‘இமைக்கா நொடிகள்’. ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ராஷி கண்ணாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இப்போது, ராஷி கண்ணா நடிப்பில் தமிழில் ‘அரண்மனை 3, மேதாவி, துக்ளக் தர்பார், சைத்தான் கா பச்சா’, தெலுங்கில் ‘பக்கா கமர்ஷியல்’ மற்றும் மலையாளத்தில் ‘பிரம்மம்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ‘என்ஜாய் எஞ்சாமி’ என்ற ஃபேமஸான ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

Share.