நயன்தாரா திமுக-வின் கொள்கை பரப்பு செயலாளரா?… சர்ச்சையில் சிக்கிய ராதாரவி!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘நிழல், பாட்டு’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பாஜக-வுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரபல நடிகர் ராதாரவி. சமீபத்தில், பிரச்சாரத்தின் போது ராதாரவி பேசுகையில் “ஒண்ணுமில்ல இந்த நயன்தாரான்னு ஒரு நடிகை இருக்காங்க. நான் அதை பத்தி பேசவே இல்ல. ஆனா, பத்திரிகைல போட்டு பெருசாக்கி விட்டுட்டாங்க, நான் தான் பேசுனேங்குற மாதிரி. சரி பேசுனேன் வச்சுக்கோங்க போடான்னு சொல்லிட்டேன். உடனே துடிக்கிறானுங்க திமுக-ல. பெண்களை பற்றி இழிவாக பேசினார் ராதாரவி, ஆதலால் அவரை இக்கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்குகிறோம்.

நான் சொன்னேன், ஏண்டா தற்காலிகம், நான் permanant-ஆ வெளிய வந்திடுறேன்டான்னு சொல்லிட்டு நான் தான் வந்தேன். சன் டிவியில இந்த நியூஸ் வந்தது. ஏன்னா நான் தான் பேட்டி கொடுத்தேன். எதுக்கு நான் சொல்றேன்னா, நயன்தாரா யாருடா? உன் கட்சி கொள்கை பரப்பு செயலாளரா? இல்ல என்ன உறவு உனக்கு? சரி உதயநிக்கும், அதுக்கும் உறவுன்னா, அதுக்கு நான் என்ன செய்யட்டும்” என்று பேசியிருக்கிறார். ராதாரவி பேசியுள்ள இந்த வீடியோ மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, ‘கொலையுதிர் காலம்’ படத்தின் பத்தரிகையாளர் சந்திப்பில் நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையாகி தான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை குறித்துதான் ராதாரவி இவ்வீடியோவில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.