பிரபாஸ் நடிப்பில் 4 மொழிகளில் வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் பிரபாஸ் 20 என்றழைக்கப்பட்ட “ராதே ஷ்யாம்”. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்தப் படத்தை இயக்குனர் கே.கே.ராதாகிருஷ்ணா குமார் இயக்கியுள்ளார். யூவி கிரேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.
இந்த படம் ஒரு காதல் கதையை மையமாக கொண்ட படம் என்றும், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெட்ஜ் உடனான காதல் யூரோப்பில் நடக்கும்படி அமைந்துள்ளதாகவும், பிரபாஸ் அதிர்ஷ்டம் சொல்லும் நபர் கதாபாத்திரத்திலும், பூஜா ஹெட்ஜ் இளவரசி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. தற்போது அரசு படப்பிடிப்புகள் நிபந்தனைகளுடன் நடைபெறலாம் என்று சில அறிக்கைகளை விடுத்துள்ளது.
இதனால் விரைவில் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவரவூள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
இத்தாலியில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அங்கேயே நடக்க உள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.