பிரபாஸின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் சூப்பரான டீசர்!

  • October 23, 2021 / 11:46 AM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு மிதூன் – மனன் பரத்வாஜ்ஜும், தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் வெர்ஷன்களுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் இசையமைத்து வருகிறார்கள். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் Glimpse-ஐ ரிலீஸ் செய்தனர்.

பிரபாஸின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் டீசர் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, இன்று (அக்டோபர் 23-ஆம் தேதி) பிரபாஸின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 14-ஆம் தேதி பொங்கல் (சங்கராந்தி) ஸ்பெஷலாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus