தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ், சினிமாவில் மட்டுமல்லாது மக்களுக்கு உதவுவதிலும் முன்னின்று அவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.
இவர் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், நடன இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ்.
இதனால் ராகவா லாரன்ஸ் அரசியலில் ஈடுபட உள்ளார் அதற்காகத்தான் இப்படி உதவி செய்கிறார் என்று பலர் வதந்திகளை பரப்பி வந்தார்கள். மேலும் பலர் இவர் அரசியலுக்கு வந்தால் இதைவிட அதிகமாக சேவை செய்வார் என்று எதிர்பார்த்து அவரை அரசியலுக்கு வருமாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ராகவாலாரன்ஸ் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் அரசியலுக்கு வந்தால் யாரைப்பற்றியாவது தவறாக பேச வேண்டியிருக்கும், அதை என்னால் செய்ய முடியாது ஆனால் அனைவருக்கும் உதவ வேண்டும் என்பது எனது குறிக்கோள். அடுத்தவரைப் பற்றி தவறாக பேசாத அரசியல் வந்தால் கண்டிப்பாக நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று குறிப்பிடுகிறேன்.
அப்படி ஒரு அரசியல் கொடுக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை தவிர யாராலும் முடியாது. அவர் அரசியலில் எப்போது ஈடுபடுவாரோ அப்போது நானும் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் அந்த பதிவின் முடிவில் நவம்பர் என்று கூறி கேள்விக்குறி எழுப்பியுள்ளார்.
இதனால் இந்த நவம்பர் கடைசியில் ரஜினி தனிக்கட்சி தொடங்க உள்ளாரா போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. ஆனால் இதற்கு ரஜினிகாந்த் தரப்பு ரஜினி தற்போது அரசியலில் ஈடுபட மாட்டார் மக்களால் கிளர்ச்சி ஏற்படும் போதே அரசியலில் அவர் ஈடுபடுவார் என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
POLITICS pic.twitter.com/Ps0RjjlwoL
— Raghava Lawrence (@offl_Lawrence) September 4, 2020