கொரோனா நிதியை வழங்குவதில் அனைவரையும் மிஞ்சி வருகிறார் டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ்.
டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான லாரன்ஸ் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வள்ளல் என்ற இமேஜை பெற்று வருகிறார். எம்ஜிஆருக்கு பின் இந்த இமேஜை இதுவரை யாரும் தமிழ் சினிமாவில் பெற்றதில்லை. விஜயகாந்த், ரஜினிகாந்த், அஜித், போன்றோர் பல வருடங்களாக உதவிகளை செய்து வந்தும், லாரன்ஸை போல அவர்கள் உடனடியாக அதிரடியாக பிரபலமாக வில்லை. இதற்கு முக்கிய காரணம் லாரன்ஸ் உதவி செய்யும் நேரமும் மற்றும் உதவி பெறப்படும் நபர்களும் தான்.
ஆரம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய தொடங்கிய லாரன்ஸ், அதன்பின் இதய அறுவை சிகிச்சை, ஏழை மாணவர்களின் படிப்பு செலவு, திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி,கஜா புயல் நிவாரணம் என தனது உதவி கரங்களை ஏந்தினார். ஆரம்பத்தில் தனது ஆசிரமத்தின் தேவைகளுக்காக அனைவரிடத்திலும் கையேந்தி நின்றி லாரன்ஸுக்கு ஒருகட்டத்தில் நிதி தாராளமாக வந்தது. இதன்பின் தனது ஆன்மீக சேவைகளையும் அதிகரித்த லாரன்ஸ் ராகவேந்திரா கோயில், சேவை இல்லம், அம்மாவுக்கு கோயில் என அடிக்கடி நியூஸ் பேப்பர்களில் இடம்பிடிக்க ஆரம்பித்து, மக்களின் கவனத்தை பெற்றார்.
தெலுங்கு திரையுலகில் கிளாஸ் இயக்குனர் என பெயரெடுத்துவிட்டு, தமிழில் முழு நேர நடிகர் மற்றும் இயக்குனரானார். சேவைகள் ஒரு பக்கம் என்றாலும், சினிமாவில் காஞ்சனா என்ற ஒரே படத்தின் மூலமாக அனைவரின் வீட்டிற்குள்ளும் அதிரடியாக நுழைந்து குடும்பத்தில் ஒருத்தரானார். காஞ்சனாவின் அனைத்து பாகங்களும் மாஸ் ஹிட் பெற, லாரன்ஸ் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரியவரானார். காஞ்சனாவின் மூலமாக சிறுவர்கள் மற்றும் திருநங்கைகளை கவர்ந்த லாரன்ஸ், ஜல்லிகட்டு போராட்டத்திற்கு 1 கோடி ரூபாய் செலவு செய்து இளைஞர்களின் மனதையும் வென்றார்.
இந்நிலையில் கொரோனா நிதியாக மொத்தமாக 3 கோடி ரூபாய் அள்ளி தந்து அனைவரின் பாராட்டத்தையும் பெற்றார். அது போதாது கடந்த சில நாட்களுக்கு முன்பு 25 லட்சமும், இன்று மேலும் 15 லட்சமும் அளித்து தன்னுடைய உதவிகளை தொடர்ந்து வருகிறார். இந்த நிதி அனைத்தும் அவருக்கு வரும் சேவை நிதிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இவை அனைத்தும் அவர் உழைத்த மற்றும் உழைக்கப்போகும் படத்திற்கான சம்பளம்…. இதனால் தான் லாரன்ஸை அடுத்த எம்ஜிஆர் என்று அவரது ரசிகர்கள் புகழந்து வருகின்றனர்.