அடேங்கப்பா… ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
September 29, 2023 / 02:38 PM IST
|Follow Us
முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக ‘சந்திரமுகி’ படத்துக்கும் ஒரு இடம் உண்டு. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.
இந்த படத்தில் ‘சந்திரமுகி’ என்ற பவர்ஃபுல்லான டைட்டில் ரோலில் ஜோதிகா நடித்திருந்தார். ஹாரர் ஜானர் படமான இதன் பார்ட் 2-வையும் பி.வாசுவே இயக்கியுள்ளார். இப்படம் நேற்று (செப்டம்பர் 28-ஆம் தேதி) தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீஸானது.
இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இதில் ஹீரோயினாக கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதனை சுபாஸ்கரன் தனது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ள இதற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, உலக அளவில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.7.50 கோடி என தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.