OTT யில் ராகவா லாரன்ஸ் திகில் திரைப்படம்!

  • June 30, 2020 / 03:27 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸ் எழுதி, தயாரித்து, இயக்கி, நடித்திருந்த திரைப்படம் “முனி 2: காஞ்சனா”. 2011ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை வெற்றி மற்றும் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருந்தார்கள்.

இந்தப்படத்தில் திருநங்கை வேடத்தில் சரத்குமார் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் லட்சுமிராய், கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த காமெடி திரில்லர் திரைப்படத்தை இந்தியில் தற்போது ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்து வருகிறார். அதில் பிரபல பாலிவுட் நடிகர் “அக்ஷய்குமார்” சரத்குமார் நடித்த திருநங்கை வேடத்தில் நடிக்திருக்கிறார்.

தற்போது லாக்டவுன் இருப்பதால் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப்படம் டிஸ்னி பிலஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கியாரா அத்வானி, துஷார் கபூர், தருண் அரோரா ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மே 22 ஆம் தேதி வெளியிடப்பட இருந்த இந்த திரைப்படத்தை லாக்டவுன் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டதால், ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்தது தனக்கு ஒரு புதிய மற்றும் சிறந்த அனுபவம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படம் சிறப்பாக அமைய முழுக்க முழுக்க ராகவா லாரன்ஸ் மட்டுமே காரணம் என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus