அடேங்கப்பா… 4 நாட்களில் லாரன்ஸின் ‘ருத்ரன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • April 18, 2023 / 05:46 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘ருத்ரன்’ கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸானது.

கே.பி.திருமாறன் கதை-திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை எஸ்.கதிரேசன் தனது ‘ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்ஸ் LLP’ மூலம் தயாரித்து, இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.

மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சரத்குமார் நடித்துள்ளார். இதன் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், சாம்.சி.எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். தற்போது, கடந்த 4 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.11.22 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus