சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. இதில் சித்தார்த், பாபி சிம்ஹா இணைந்து நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.
இதன் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள்X’ கடந்த நவம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. இதில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ளனர்.
இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் – ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்துக்காக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.15 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.