Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • November 10, 2023 / 02:02 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. இதில் சித்தார்த், பாபி சிம்ஹா இணைந்து நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதன் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள்X’ இன்று (நவம்பர் 10-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் – ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus