Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • December 18, 2023 / 01:01 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. இதில் சித்தார்த், பாபி சிம்ஹா இணைந்து நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதன் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள்X’ கடந்த நவம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. இதில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருந்தனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருந்தார். இதனை ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் – ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.67.07 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus